
முப்படைத் தளபதி தேர்வு சீனியாரிட்டி அடிப்படையில் அல்ல: அரசின் முடிவு...முன்னாள் ராணுவ தளபதி பேட்டி
முப்படைத்தளபதி தேர்வு என்பது சீனியாரிட்டி அடிப்படையில் வருவது அல்ல அது அரசின் முடிவு என முன்னாள் ராணுவ தளபதி சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த தளபதி எங்கிருந்து வருவார் விமானப்படையா, ராணுவவமா? கப்பற்படையிலிருந்தா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திராவில் அதிவேகமாக சென்ற கார்... விபத்தில் தீ பிடித்து 6 பேர் பலி

ஹெலிகாப்டர் விபத்து
நேற்று காலை முக்கிய நிகழ்ச்சிக்காக முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 14 பேர் கோவை சூலூரிலிருந்து வெலிங்டன் ராணுவதளத்துக்கு எம்.ஐ சீரிஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் என்பவர் காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

முப்படை தளபதி மனைவியுடன் உயிரிழப்பு
இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைவர் உடல்களும் கருகிய நிலையில் டி.என்.ஏ சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முறையான காரணம் விரிவான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
முப்படைத்தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அடுத்த தலைமை தளபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த தளபதி குறித்து கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்த பல்வேறு ஹேஷ்யங்கள் கிளம்பி வருகின்றன. ராணுவ தளபதி நரவானே பெயரும் அடிபடுகிறது.

முப்படை தளபதி யார்? முன்னாள் ராணுவ தளபதி கருத்து
முப்படைத் தளபதி (சிடிஎஸ்) தேர்வு என்பது ராணுவ அதிகாரியின் சீனியாரிட்டி தொடர்பான விஷயம் அல்ல என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி ஷங்கர் ராய் சவுத்ரி தனியார் சானலுக்கு அளித்த பேட்டியில் அடுத்த சில நாட்களில் தலைமை தளபதியின் பெயரை அரசாங்கம் அறிவிக்க வாய்ப்புள்ளது. தலைமை தளபதி தேர்வு செயல்முறையானது, சீனியாரிட்டி என்பதை விட அரசாங்கத்தின் கருத்துக்கு உட்பட்டது.

சீனியாரிட்டி இல்லாவிட்டாலும் தேர்வானவர் - ஓய்வு தளபதி கருத்து
பிபின் ராவத் நேரடியாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். அவர் தலைமை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் சீனியாரிட்டியில் இல்லை, ஜெனரல் பிபின் ராவத் 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 2016 ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார், அப்போது அவர் இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார்.

பிபின் ராவத்தின் திறமையால் வந்த பதவி
கிளர்ச்சியாளார்கள் எதிர்ப்பை கையாண்டது, லடாக் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணங்களை வைத்து அவரது அனுபவத்திற்காக முதல் முப்படைத்தளபதி தேர்ந்தெடுக்கப்பட்ட்டார். தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படுவதற்கான விதிகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, அடுத்த தலைமை தளபதிக்கான நபரை தேர்ந்தெடுப்பதற்கான அமைப்புப் பற்றி இப்போது குறிப்பிடப்பட வேண்டும்.

அடுத்த தலைமை தளபதி யார்?
அடுத்த தலைமை தளபதி ராணுவம், கடற்படை அல்லது விமானப்படைக்கு ஒதுக்கப்படுமா என்பது தெரியவில்லை" என்று ராய் சவுத்ரி கூறியுள்ளார். ராய் சவுத்ரி கணிப்புப்படி அடுத்த தலைமைத் தளபதி தேர்வுக்கான கமிட்டி அறிவிக்கப்படுமா? அது சீனியாரிட்டி அடிப்படையில் இருக்குமா? அல்லது அரசு முடிவாக இருக்குமா? என்பது போகப்போக தெரியும்.