சிங்கப்பூரில் முதல்முறையாக 60000 சதுர அடியில் பிரமாண்டமான ஐஸ்க்ரீம் அருங்காட்சியம்
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் முதல்முறையாக ஐஸ்க்ரீம் அருங்காட்சியம் 60000 சதுர அடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடம் கண்டனே.. என்று அன்றே சிங்கப்பூரை பற்றிய ரஜினிகாந்த் பாடல் ஒன்று மிகவும் பேமஸ். தமிழர்கள் மிக அதிகமாக வாழும் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று.
அங்கு பொழுதுபோக்கு விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. மிகச்சிறந்த சுற்றுலா தளமான சிங்கப்பூரில் அமெரிக்காவில் உள்ள ஐஸ் கிரீம் அருங்காட்சியகம் தனது கிளையை அமைத்துள்ளது

60000 சதுர அடி
சிங்கப்பூரில் 60000 சதுர அடியில் பிரமாண்டமாக ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டது. சிங்கப்பூரிரி முழுவதும் பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஐஸ்கிரிம் அருங்காட்சியம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஐஸ்கிரீம் பால்கள்
கொரோனா காரணமாக பார்வையாளர்கள் கூட்டத்தைத் தடுக்க முன்கூட்டியே முன்பதிவு செய்தால் மட்டுமே செல்ல முடியும். ஐஸ்கிரீம் பிரியர்கள் இந்த மியூசியத்தை பார்த்தால் வெளியே போகவே மாட்டார்கள். எங்கு பார்த்தாலும் ஐஸ்கிரீம், சாகச விளையாட்டுக்கள், ஐஸ்கிரீம் பந்துகள், ஐஸ்கிரீம் குளங்கள் என சிறுவர்கள், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையியலான ஏராளமான விஷயங்கள் காணப்படுகின்றன.

மறந்து போவீர்கள்
சிங்கப்பூர் மக்கள் ஐஸ்கிரீம் விளையாட்டுகளை விளையாடி உற்சாகமாக இருக்கிறார்கள். ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு உண்மையில் மிக அற்புதமான இடம் இந்த மியூசியம் ஆகும். இதுபற்றி சுற்றுலா பயணி ஒருவர் கூறும் போது "இது உண்மையில் ஒரு நல்ல இடம் - இது மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் இங்கு இருக்கும்போது வெளியே என்ன நடக்கிறது என்பதை மறந்துவிடுவீர்கள்." என்கிறார் உற்சாகமாக.

அமெரிக்க நிறுவனம் திட்டம்
ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் விரைவில் அதிக இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் சமூக ஊடகங்களில் ஏக பிரபலமாக உள்ளது. இனி சிங்கப்பூரில் உள்ள அந்தநிறுவனத்தின் அருங்காட்சியகமும் பெரியஅளவில் புகழ்பெறும் என்று தெரிகிறது,.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications