15 ஆடுகள்.. 50 கோழி.. "அறிவாலயத்தின்" மூக்கை துளைத்த கமகம கறி விருந்து.. யாரிந்த சிவகங்கை பெண்? ஓஹோ
சிவகங்கை: சிவகங்கையில் நடத்தப்பட்டிருக்கும் கறிவிருந்தானது, ஒட்டுமொத்த திமுகவினரின் கவனத்தை பெற்று வருகிறது.. இது தொடர்பான வீடியோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. யாரிந்த பெண்?
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதேபோல, அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக செய்திகளும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

ராஜகண்ணப்பன்: தமிழக அமைச்சர்களும், இந்த தகவலை இதுவரை மறுக்காமல் உள்ளனர்.. உதயநிதி துணை முதல்வராவது குறித்த கேள்விக்கு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உட்பட பெரும்பாலான அமைச்சர்களும் பச்சைக்கொடியை காட்டியே தங்கள் பதிலை வழங்கியிருந்தனர். வரும் 19ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என பகிரங்கமாகவே போட்டுடைத்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்..
கடந்த 5-ம் தேதி கொளத்தூரில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் ஆய்வு நிகழ்ச்சியின்போது, "விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?" என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கோரிக்கை வலுக்கிறது.. ஆனால் பழுக்கவில்லை" என்று பதிலளித்திருந்தார்.. துணை முதலமைச்சராக போவதாக சொல்லப்படுவது வதந்திதான் என்று அமைச்சர் உதயநிதியும் ஒருமுறை கூறியிருந்தார்.
தொண்டர்கள்: எனினும், திமுக தலைவர்களும், நிர்வாகிகளும் விடுவதாக இல்லை.. அதிலும் தொண்டர்கள் ஒருபடிமேலே போய்விட்டார்கள்.. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த துவங்கியிருக்கிறார்கள். இதில் ஒரு பெண், உதயநிதி துணை முதல்வராக வேண்டுமென்று கிடாய்களை வெட்டி விருந்து வைத்து, வழிபாடே செய்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி சாத்தையா.. இவர் இளையான்குடி திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.. அந்த பகுதியிலுள்ள அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கறிவிருந்து படைத்துள்ளார்.
கறிவிருந்து: இதற்காக 15க்கும் மேற்பட்ட கிடாய்கள், 50க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு, கமகம அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி, குடல் கறி, தலைக்கறி முட்டை, என பல்வேறு வகையான உணவுகளுடன் கறி விருந்து வைத்துள்ளார்..
அத்துடன், தங்களது சாலைகிராமம் மற்றும் இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் குடும்பத்தோடு கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் வழிபாடும் நடத்தியுள்ளார். இந்த கறிவிருந்தில் இளையான்குடி, சாலைகிராமம், அய்யம்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் நடத்தியிருக்கும் இந்த கறிவிருந்துதான், திமுகவினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications