சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோட்ஸ் எடுங்கப்பா.. கார்த்தி சிதம்பரத்திற்கு இப்படி ஒரு திறமையா? சீரியலை வைத்து சீரியஸ் பிரச்சாரம்!

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் செய்யும் தேர்தல் பிரச்சாரம் ஒன்று இணையத்தில் பெரிய வைரலாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் செய்யும் தேர்தல் பிரச்சாரம் ஒன்று இணையத்தில் பெரிய வைரலாகி இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர் பாஜக தேசிய செயலாளர் வேட்பாளர் எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இதையடுத்து தற்போது கார்த்தி சிதம்பரம் அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இப்போதே அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் செய்த பிரச்சாரம் ஒன்று பெண்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.

தமிழகத்தில் அதிக தொகுதிகளை வெல்லப்போவது எந்த கூட்டணி? வெளியான அதிரடி கருத்துக் கணிப்பு தமிழகத்தில் அதிக தொகுதிகளை வெல்லப்போவது எந்த கூட்டணி? வெளியான அதிரடி கருத்துக் கணிப்பு

கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம்

கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம்

கார்த்தி சிதம்பரம் தனது பிரச்சாரத்தில் பெண்களை நோக்கி, எந்த சீரியல் பார்க்கிறீர்கள்? லட்சுமி ஸ்டோர் பார்க்குறீங்களா, கல்யாண வீடு பார்க்குறீங்களா.. எது பாக்குறீங்க அதிகமா.. செம்பருத்தி சீரியலா? என்ன செம்பருத்தி சீரியல்ல பார்வதி பக்கமா? வனஜா பக்கமா? ஏன் கேட்குறேன்னா எனக்கும் இதெல்லாம் தெரியும்.

கேபிள் விலை

கேபிள் விலை

கேபிள் டிவி விலை ரொம்ப கூடிடுச்சு. புதிய விதிமுறையால் 100 ரூபாய் இருந்த விலை 400 ரூபாய் ஆகிட்டு. நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். கேபிள் விலையை மறுபடி குறைப்பேன். நீங்கள் எப்போதும் வீட்டில் சாயங்காலம் பார்வதி வனஜா சண்டையை பார்க்க நான் ஏற்பாடு செய்கிறேன்.

டிவி முக்கியம்

நீங்கள் எப்போதும் டிவி பார்க்க நான் முடிந்ததை செய்கிறேன். நான் ஏன் செம்பருத்தி சீரியலை சொல்கிறேன் என்றால், அதில் வரும் ஹீரோ பெயர் கார்த்தி. அதனால் பெண்கள் எல்லோரும் எனக்கு வாக்களியுங்கள் என்று கார்த்தி சிதம்பரம் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். ஆனால் உண்மையில் செம்பருத்தி நாடகத்தில் ஹீரோ பெயர் ஆதி என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஆரவாரம்

பெண்கள் ஆரவாரம்

இந்த பிரச்சார கூட்டத்தில் பெண்கள்தான் அதிக அளவில் இருந்தனர். இதையடுத்து பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் சீரியல்களை குறித்து தொடர்ச்சியாக பேசி எல்லோரையும் கவர்ந்தார் கார்த்தி சிதம்பரம். அவரின் பேச்சுக்கு பெண்கள் தொடர்ந்து கைதட்டி வரவேற்பு அளித்தனர்.

English summary
Karti Chidambaram uses news technique to get women votes with his serial knowledge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X