மருது சகோதரர்கள் நினைவு தினம்.. சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!
சிவகங்கை: மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருது சகோதரர்களின் 221வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான கட்சித் தலைவர்கள், அமைப்புகள் அவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி, சிவகங்கை மாவட்ட மக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனால் நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதிகள் தவிர்த்து 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Comments
சிவகங்கை விடுமுறை மருது சகோதரர்கள் மருது பாண்டியர்கள் நினைவு நாள் sivagangai holiday maruthu sagotharargal maruthu pandiyans memorial day
English summary
A local holiday has been announced for Sivagangai district tomorrow on the occasion of Maruthu Pandiyans memorial day.
Story first published: Wednesday, October 26, 2022, 13:19 [IST]