மாலை டும்டும்! பிரான்ஸ் மணமகள்..சிவகங்கை மணமகன்! களைகட்டிய காரைக்குடி! தமிழ்னா அவ்வளவு பிடிக்குமாம்!
சிவகங்கை : தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில், தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரம் மிகவும் பிடித்தமானது என மணப்பெண் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு - மாணிக்கவள்ளி தம்பதியினர்.
தங்கராசு பிரான்ஸ் நாட்டில் அம்பாசிடரில் பணிபுரிந்து வருவதால் தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிலேயே வசித்து வருகிறார்.

பிரான்ஸ் பெண்
இவரது மகன் கலைராஜன் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் பிறந்த நிலையில் எட்டு வயதில் தனது குடும்பத்தாருடன் பிரான்சுக்கு சென்றுள்ளார். தங்கராசு மகன் அங்குள்ள ரென் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் அதே கல்லூரியில் அறிவியல் பயின்ற மாணவி கயலை காதலித்து வந்தார் .

இந்து முறைப்படி திருமணம்
இதனையடுத்து இருவரும் தங்கள் காதலிப்பதை பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்களும் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்தில் அவரது வீட்டில் பிரான்ஸ் பெண் கயலின் தாய் சகோதரி,கலைராஜனின் உறவினர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

அட்சதை தூவி வாழ்த்து
இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மணமகன் பிறந்த ஊரில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்து சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மணமக்கள் இருவரையும் மணமகனின் உறவினர்களும், பிரான்சிலிருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும், அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் கலாச்சாரம்
மணமக்களை உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று கூடி வாழ்த்திய நிலையில், தமிழ் முறைப்படி திருமணம் குறித்து பிரான்ஸ் பெண் கயல் கூறுகையில் நாங்கள் படிக்கும் பொழுது மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தற்போது இந்தியாவில் தமிழகத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்வது சந்தோஷமாக உள்ளது, தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தனக்கு மிகவும் பிடித்தமானது" என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications