Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் சீட் இல்லை! தவெகவில் இணைகிறாரா முன்னாள் எம்எல்ஏ தூசி.கே.மோகன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார் தூசி கே. மோகன். இவருக்கு தவெக சார்பில் செய்யாறு தொகுதி கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 3 கட்டங்களாக வெளியானது. அதில் தூசி.மோகனுக்கு சீட் கொடுக்கவில்லை.

dusi k mohan

மேலும் கட்சியிலும் அவருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற அதிருப்தியில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் இன்றைய தினம் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைகிறார் என சொல்லப்படுகிறது. அவ்வாறு இணையும் பட்சத்தில் தூசி கே.மோகனுக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் 234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தூசி மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக வேட்பாளர் ஜோதி வென்றார். இதனால் 2026 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவர் அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+