காங்கிரஸ் கட்சியில் இனி நியமனம் இருக்காது! தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்வு! ப.சிதம்பரம் புது தகவல்!
சிவகங்கை: காங்கிரஸ் கட்சியில் இனி தேர்தல் மூலம் மட்டுமே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் நியமனம் இருக்காது எனவும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ப.சிதம்பரம் தெரிவித்திருக்கும் இந்த தகவல் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் இனி நியமனம் இருக்காது என்றும் தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் எனவும் கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் அதிகளவில் இணையவில்லை என்பதை தாம் ஏற்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு சோர்வு
காங்கிரஸ் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சோர்வை வெறுமனே தலைவர்களால் மட்டும் போக்கமுடியாது என்றும் அடிமட்ட தொண்டர்களும் இணைந்து செயல்பட்டால் தான் அதனை நீக்க முடியும் எனவும் ப.சிதம்பரம் கூறினார். இதேபோல் பெண்களிடமும் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் இவ்வாறு தனது மனதில் தோன்றிய கருத்தை பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த தோல்வி
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை உத்தரப்பிரதேசத்தில் எதிர்பார்த்த தோல்வி கிடைத்திருப்பதாகவும் அதே வேளையில் பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மாநிலங்களில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் கூறினார். மணிப்பூரை பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே அம்மாநிலத்தில் உட்கட்சி பிரச்சனை ஏராளமாக இருந்ததால் அங்கும் வெற்றிக்கான நம்பிக்கை தனக்கு இல்லாமல் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

தலைவர் பதவி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி இருந்து வரும் நிலையில், இனி தேர்தல் மூலம் மட்டுமே காங்கிரஸில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர் என்ற ப.சிதம்பரத்தின் கருத்து தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications