காரைக்குடி மாநகராட்சி ஆபீஸில் பெண் ஊழியர் ஆவேசம்.. கையில் என்ன அது.. அதிர்ந்த ஊழியர்கள்
சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியில் காசாளராக வேலை பார்த்து வருபவர் ஷர்மிளா பர்வீன். நேற்று வரிவசூல் குறித்த கூட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் நடந்தது.. அப்போது ஷர்மிளா பர்வீன் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாமதமாக வந்தவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த மாநகராட்சி ஊழியர் கையை கத்தியால் கிழித்துக்கொண்டதுடன், அதிக பணிச்சுமை என கூறி போராடியதால் பரபப்பு ஏற்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் காசாளராக 32 வயதாகும் ஷர்மிளா பர்வீன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் ராஜ்கபூர் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த நிலையில் காரைக்குடி மாநகராட்சியில் வரிவசூல் குறித்த கூட்டம் நேற்று காலை ஆணையாளர் முன்னிலையில் நடந்துள்ளது.

அந்த மாநகராட்சி கூட்டத்திற்கு ஷர்மிளா பர்வீன் தாமதமாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே தாமதமாக வந்தவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும்படி மாநகராட்சி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஷர்மிளா பர்வீன், ஊருக்கு வந்திருந்த தன் கணவரை மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் காரைக்குடி மாநகராட்சி ஆணையாளரின் அறைக்கு சென்றுள்ளனர். தனக்கு அதிக பணிச்சுமை உள்ளதாக கூறி ஷர்மிளா பர்வீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.. பின்னர் காரைக்குடி மாநகராட்சி மெயின் கேட் பகுதிக்கு வந்த அவர், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் தனது கையை கிழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஷர்மிளா பர்வீனை தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்கள்.
இதற்கிடையே காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். மேலும் காரைக்குடி மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த வேண்டியது எனது கடமை மட்டுமின்றி, அரசின் உத்தரவு என்றும் கூறினார்.
இது ஒருபுறம் எனில், சாப்ட்வேர் என்ஜினியர் ராஜ்கபூர், தன்னுடைய மனைவி ஷர்மிளா பர்வீனுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தி, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியதுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications