அந்த 7 ஓவர்கள்.. கதி கலங்கிடுச்சு! சீட் நுனியில் உட்கார வைத்த நியூசிலாந்து.. இந்தியா வென்றது எப்படி?
சென்னை: நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஆடி வருகின்றனர்.
நியூசிலாந்து அணியில், வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே ஆகியோர் ஆடி வருகின்றனர்.
டாஸ் தோல்வி
இந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் டாஸ் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதன் மூலம் 15 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி டாஸ் தோற்று உள்ளது. ஒரு காயின் டாஸை தொடர்ச்சியாக 15 முறை தோற்பது மிகவும் கடினம் ஆகும். ரோஹித் சர்மா டாஸ் தோற்றது இந்திய அணிக்கு சிக்கல் ஆனது.

அதன்படியே தொடக்கத்தில் பாஸ்ட் பவுலிங்கில் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. வேகமாக 60 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு பிரஷர் போட்டனர். ஆனால் அதன்பின் வருண் சக்ரவர்த்தி களமிறங்கி.. அவர் ஓவரில் இருந்தே ஆட்டத்தை மாற்றினார். முதல் 2 பந்துகள் விக்கெட் அருகே சென்று.. பின்னர் அதே ஓவரில் 5வது பந்தில் விக்கெட் எடுத்தார்.
அதன்பின் வந்த ஜடேஜா, குல்தீப் என்று மாறி மாறி விக்கெட் எடுத்தனர். வருண் 2, குல்தீப் 2, ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல் 63, மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களை எடுத்து ஆட்டத்தை கொஞ்சம் சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 50 ஓவரில் நியூசிலாந்து அணி 251/7 ரன்கள் எடுத்தது.
அந்த 7 ஓவர்கள்
அதன்பின் இறங்கிய இந்திய அணியில் இந்த முறை ரோஹித் கவனமாக ஆடினார். பைனல் முக்கியம் என்பதால் பொறுப்பை உணர்ந்து ஆடினார் . 83 பந்தில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 76 ரன்கள் எடுத்தார். 105 ரன்கள் வரை இந்திய அணி விக்கெட் இழக்காமல் ஆடியது. ஆனால் அதன்பின் அடுத்தடுத்து 7 ஓவர்கள் கேப்பில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
சுப்மான் கில், 18.4 ஓவரில் அவுட் , விராட் கோலி, 19.1 ஓவரில் அவுட்.), ரோஹித் சர்மா, 26.1 ஓ. என்று 7 ஓவரில் ஆட்டமே மாறியது. 105 ரன்களுக்கு விக்கெட் இல்லாமல் 122 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலை வந்தது. ஆனால் அதன்பின் ஷ்ரேயாஸ் 48, அக்சர் பட்டேல் 29 என்று ஆட்டத்தை மாற்றினர்.
கடைசியில் ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் எப்போதும் போல கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications