For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை மீதான ஐ நா விசாரணை குழுவில் இடம்பெறும் வல்லுநர்கள் பெயர்கள் அறிவிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவில் இடம்பெறும் வல்லுநர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அதன் ஆணையர் நவி பிள்ளை விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வல்லுநர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

இதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்ற ஃபின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ நா மனித உரிமை குழுவுக்கு ஆலோசனை வழங்குவர்.

English summary
With Navi Pillay slated to leave as UN High Commissioner on Human Rights on August 31, on June 25 she made an announcement about the HRC Panel on Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X