இலங்கை அரசியலில் பரபரப்பு- பிரதமர் ரணில் ராஜினாமாவா? தனித்து ஆட்சியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இலங்கை அரசியலில் திருப்பம்...அதிபர் பதவி விலக வாய்ப்பு?- வீடியோ

  கொழும்பு: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி- சுதந்திர கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  இலங்கையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியைப் பெற்றது.

  சுதந்திர கட்சி படுதோல்வி

  சுதந்திர கட்சி படுதோல்வி

  ஐக்கிய தேசிய கட்சி 2-வது இடத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3-வது இடத்தையும் பெற்றது. சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திர கட்சி படுதோல்வியை சந்தித்தது.,

  ரணில் ராஜினாமா?

  ரணில் ராஜினாமா?

  ஆளும் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

  சிறிசேனாவுடன் ஆலோசனை

  சிறிசேனாவுடன் ஆலோசனை

  எனினும் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு தனித்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மைத்ரிபால சிறிசேனவுடன் ரணில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  சுதந்திர கட்சிக்கு வருகிறேன்

  சுதந்திர கட்சிக்கு வருகிறேன்

  அதேநேரத்தில் சுதந்திர கட்சியின் தலைமையை ஏற்று அதை வலுப்படுத்த தாம் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்சே கூறிவருகிறார். இதனால் கொழும்பில் பரபரப்பு நிலவுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Srilankan Prime Minister Ranil Wickremesinghe is trying to form a UNP government, sources said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற