For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறிசேனவின் வெப்சைட்டை ஹேக் செய்து 'சைபர் வார்' டிக்ளேர் செய்த 17 வயது மாணவன் கைது

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை ஹேக் செய்து 'சைபர் வார்' டிக்ளேர் செய்த 17 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சிறிசேனவின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 25-ந் தேதி ஹேக் செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஹேக் செய்து அந்த இணையதளத்தை முழுவதுமாக முடக்கியதுடன் 'உங்களுக்கு எதிராக சைபர் யுத்தம் தொடரப்பட்டுள்ளது' என பிரகடனம் செய்தான்.

Sri Lankan Student Hacks President's Website

இது தொடர்பாக கடுகண்ணாவை என்ற இடத்தைச் சேர்ந்த 17 வயது மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தங்களுக்கான தேர்வு மாதங்களை தற்போதைய அரசாங்கம் மாற்றுவதைக் கண்டித்தே ஹேக் செய்ததாக அந்த மாணவன் கூறியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

English summary
A 17-year-old Sri Lankan is being detained on charges of hacking the website of President Maithripala Sirisena.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X