இந்தியாவுடன் இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க உறவு எப்படி? அதானி காற்றாலை திட்டம் ரத்தா?
டெல்லி; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடதுசாரி கட்சியான ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, தேர்தலின் போது இந்தியாவின் அதானி குழும காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்திருந்தார். தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற அதானி காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து இந்தியாவுடன் மோதல் போக்கை அனுர குமார திசநாயக்க தொடங்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க, ஜேவிபி எனும் இடதுசாரி கட்சியின் தலைவர். இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்க்கக் கூடிய கட்சி. இந்தியா- இலங்கை ஒப்பந்தம், இலங்கை தமிழர் பிரச்சனைக்கான 13-வது திருத்தம் என எதனையும் ஏற்காத கட்சிதான் ஜேவிபி. இலங்கை என்பது ஒற்றை நாடாகத்தான் இருக்க வேண்டும்; அதிகாரப்பகிர்வு, கூட்டாட்சி அமைப்பு என எதனையும் ஏற்க மறுக்கக் கூடியதும் ஜேவிபிதான்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பின் போதும் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவும் வாக்குறுதி தராதவர்தான் ஜேவிபியின் தலைவரான புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க.
ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு சாதகமான களம் இருப்பதாக யூகித்துதான் கடந்த பிப்ரவரி மாதமே அவரை டெல்லிக்ககு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது மத்திய அரசு. இந்தியாவுக்கு பெயரளவுக்கு வாக்குறுதி வழங்கிவிட்டு தமது சிங்கள பேரினவாத முகத்தையே தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படுத்தி இருந்தார் அனுரா.
குறிப்பாக அதானி குழும காற்றாலைத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த திட்டமானது இந்திய கடல் எல்லைக்கு அருகே தமிழ்நாட்டின் கடற்பரப்பை ஒட்டிய தீவுகளில் அமையக் கூடியது. முதலில் சீனாவுக்குதான் இந்த திட்டம் வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக மிக கடுமையான எதிர்ப்புக்குப் பின்னரே அதானி குழுமத்துக்கு இத்திட்டம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தைத்தான் தாம் ஜனாதிபதியானால் ரத்து செய்வோம் என கூறியிருந்தார் அனுர குமார திசநாயக்க. அதானி குழுமத்துக்கு சொந்தமானதுதான் இந்த திட்டம். ஆனால் இந்தியாவின் இருப்பு, செல்வாக்கை வெளிப்படுத்தக் கூடியதும் இந்த திட்டம்.
தேர்தல் கால வாக்குறுதி என்ற அடிப்படையில் அதானி குழும திட்டத்தை ரத்து செய்ய அனுர குமார திசநாயக்க முயன்றால் வெளிப்படையாகவே இந்தியாவுடனான மோதல் போக்காக தொடங்கும். அணடை நாடான மாலத்தீவும் இப்படித்தான் தொடக்கத்தில் இந்தியா எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தது. காலம் தந்த படிப்பினைகள் இப்போது இந்தியாவுடன் நட்புறவை தேடுகிறது. இலங்கை பொருளாதரப் பேரழிவில் சிக்கிய போது கடனுதவியை வாரிக் கொடுத்தது இந்தியா. சீனாவோ, குறுகிய கால கடன் என்ற பெயரில் இலங்கையின் நிலத்தை கைப்பற்றி வருகிறது. இந்தியாவுடன் நல்லுறவை கடைபிடிக்குமா இலங்கை அல்லது சீனாவின் காலனி நாடாகா உருமாறுமா? என்பது புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் கைகளில்தான் இருக்கிறது!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications