For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பில் ரஷ்ய அதிகாரிகள்.. எரிபொருள் இறக்குமதிக்கு புதினிடம் கடன் கேட்கும் இலங்கை அதிபர் கோத்தபாய!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கைக்கு எரிபொருள் வழங்க கடன் உதவி செய்ய வேண்டும் என்று ரஷ்யா அதிபர் புதினிடம் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று இலங்கைக்கு ரஷ்யா அதிகாரிகளை புதின் அனுப்பி வைத்துள்ளார்.

பொருளாதார பேரழிவு நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை உலக நாடுகளிடம் ஒவ்வொரு அத்தியாவசிய தேவைக்கும் உதவிகளைப் பெற்று வருகிறது. இலங்கைக்கு ஏற்கனவே மிகப் பெரிய அளவில் கடனுதவிகளை வழங்கி உள்ளது.

 Srilanka President Gotabaya Rajapaksa seeks help from Putin on fuel supplies

இலங்கையில் எரிபொருட்களை பெறுவதற்கு பொதுமக்கள் பல நாட்கள், பல கிலோமீட்டர் தொலைவிலான வரிசைகளில் காத்து நிற்கின்றனர். இப்படி காத்து கிடந்தவர்கள் இதுவரை 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் பெட்ரோல், டீசல் விநியோகத்துக்கும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவிட்டன. இதனால் இலங்கையில் பொது போக்குவரத்தும் முற்றாக முடங்கிவிட்டது. அரசு பேருந்துகளிலும் கட்டணங்கள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. இலங்கைக்கு இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் வரும் சுற்றுலா பயணிகள், வரும் போது சைக்கிள்களையும் எடுத்து வருகிற அவலம் நிகழ்கிறது.

இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய கடன் உதவி வழங்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய கோத்தபாய ராஜபக்சே இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதனை கோத்தபாய ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 Srilanka President Gotabaya Rajapaksa seeks help from Putin on fuel supplies

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் பிரதிநிதிகள் 2 பேர் இன்று இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தனர். கொழும்பு வருகை தந்த 2 பேரும் ரஷ்யாவின் எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆவர். ரஷ்யாவின் மாஸ்கோ- இலங்கையின் கொழும்பு இடையேயான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவின் பிரதிநிதிகள் பஹ்ரைன் மூலமாக இலங்கை வருகை தந்தனர். இலங்கை அரசு சார்பில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் ரஷ்யாவின் பிரதிநிதிகளை வரவேற்றனர்.

முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருள் பெறுவதற்காக இலங்கை அமைச்சர்கள் மாஸ்கோ செல்லவும் முடிவு செய்திருந்தனர். அதேபோல் இலங்கை அதிகர் கோத்தபாய ராஜபக்சேவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடுஇலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு

English summary
Srilanka President Gotabaya Rajapaksa has urged Russia on fuel supplies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X