திமுக ஆட்சி அமைக்க வழி வகுக்காதீர்... எடப்பாடிக்கு சு.சுவாமி அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவால் முதல்வர் பதவி பெற்ற நீங்கள் அக்கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிமுக இணைப்புக்கு பிறகு, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இழந்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Subramanian Swamy advices CM Edappadi Palanisamy

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், திமுக ஆட்சி அமைக்க எளிதாக்கிவிடக் கூடாது என எடப்பாடி விரும்பினால், சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொண்டு தன்னை முதல்வராக்கிய அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

திமுகவுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இணைந்து கூட்டணி அரசை இன்னும் ஓரிரு நாள்களில் உருவாக்குவர் என்று சுப்பிரமணியன் சுவாமி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramanian swamy advises EPS if he does not want to facilitate DMK in power to accept Sasikala as leader.
Please Wait while comments are loading...