"அங்கே" இருக்கும் எல்லோரும் நல்லா இருக்கனும்! டேவிட் வார்னரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
சிட்னி : விநாயகர் சதுர்த்து விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்துக்களின் முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதார திருநாளான இன்று விநாயகர் சதுர்த்து விழா உலகெங்கும் வசிக்கும் இந்துக்களிடையே வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்த ஒரு செயலை தொடங்கினாலும், அதை வெற்றியுடன் செய்து முடிக்க முதலில் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு ஆரம்பிக்கும்போது அந்த செயல் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு அனைவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் அனைவரும் தங்கள் வீடுகளில் சுளிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ அரளி மலர் மாலைகள் அணிவித்து கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து பக்தியோடு வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து
3 நாட்கள் வழிபாடு நடத்திய பின் சிலைகளை அருகிலுள்ள நீர்நிலைகள் கரைப்பது வழக்கம். பல ஆண்டுகளாய் நடந்து வரும் இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

டேவிட் வார்னர்
அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விநாயகரை வழிபடுவது போல் புகைப்படத்தை பகிர்ந்து," அங்குள்ள எனது நண்பர்கள் அனைவருக்கும், விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். உங்களுக்கு நிறைய மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை விரும்புகிறேன்!" என கூறியுள்ளார்.

ஆர்வம்
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிலும் இந்தியாவில் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் டேவிட் வார்னர் இந்திய திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது வழக்கம். குறிப்பாக புஷ்பா, பாகுபலி உள்ளிட்ட பாடல்களுக்கு அவர் வெளியிட்டு நடன வீடியோக்கள் லைக்குகளை அள்ளியது. தற்போது அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications