ஆவேசமாக பாய்ந்து வந்த முதலை.. அசால்ட்டாக தோசைக்கல்லை கொண்டு அடித்து விரட்டிய முதியவர்.. வீடியோ!
சிட்னி: ஆவேசமாகப் பாய்ந்து வந்த முதலையை முதியவர் ஒருவர் அசல்டாக காட்டுக்குள் அனுப்பும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
வயதானவர்கள் என்றால் அமைதியாக இருந்து கொண்டு, எப்போதும் குழந்தைகளைக் கூப்பிட்டு அட்வைஸ் செய்து கொண்டு இருப்பார்கள் என்றே பலரும் நினைப்போம்.
ஆனால், அவர்கள் ஆவேசமானால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வயதான ஒருவர் டென்ஷன் ஆனதால் கையில் இருப்பதைக் கொண்டு செய்யும் செயலின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியா
உலகில் மற்ற நிலப்பரப்புகள் உடன் இல்லாமல் தனித்து விடப்பட்டு இருக்கும் பகுதிகளில் ஒன்று ஆஸ்திரேலியா. இப்படித் தனித்து விடப்பட்டு இருப்பதாலேயே அங்குப் பல அபூர்வ விலங்குகள் இருக்கும். கங்காருக்கள் முதல் பெரிய பெரிய முதலைகள் வரை பலவற்றை நாம் அங்குப் பார்க்க முடியும். இதனால் ஆஸ்திரேலியாவில் நகர்ப் பகுதிகளைத் தவிர்த்துப் பிற பகுதிகளில் மனித மிருக மோதல்கள் அடிக்கடி ஏற்படும்.

பயங்கர விலங்குகள்
ஏனென்றால், அங்கு தான் உலகில் பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றின் மிகவும் மாறுபட்ட விலங்குகள் உள்ளன. மேலும், அங்குள்ள 80%க்கும் அதிகமான தாவரங்கள், பாலூட்டிகள், ஊர்வனங்கள் தனித்துவமானவை. அவை உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை. எனவே, அங்கு நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்கள் கங்காருக்களைச் சந்திப்பதோ அல்லது முதலை, பாம்பு போன்ற பயங்கர உயிரினங்களை வீட்டில் எதிர்கொள்வதோ அதிசயமான நிகழ்வு இல்லை.

வீடியோ
இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் விலங்குகளை விரட்டப் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கருவிகளைக் கையில் வைத்து இருப்பார்கள். ஆனால் சில எதிர்பாராத சமயங்களில், தக்க நேரத்தில் ஆயுதங்கள் கிடைக்காது. அப்போது கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டும். அதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

முதியவர்
ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த பப் உரிமையாளர் ஒருவர், தன்னை ராட்சத முதலை தாக்க வந்த போது, கையில் இருந்த தோசைக் கல்லையே ஆயுதமாக மாற்றிவிட்டார். ஆவேசமாகப் பாய்ந்து வந்த முதலையைப் பார்த்ததும் கடுப்பான கை ஹான்சன், அசல்டாக அதைக் காட்டுக்குள் அனுப்பும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தோசைக்கல்
அந்த வீடியோவில் முதலை ஆவேசமாகத் தனது ராட்சத வாயைப் பிளந்து கொண்டு கடிக்க வருகிறது. அதைப் பார்த்து துளியும் அஞ்சாமல் அந்த முதியவர் வெறும் தோசைக் கல்லை வைத்துக் கொண்டு முதலையின் தலையில் அடிக்கிறார். முதியவரிடம் அடி வாங்கிய முதலை, அப்படியே பம்பி காட்டிற்குத் திரும்பிச் செல்கிறது. இவை அனைத்தும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

புலி
பண்டைக் காலத்தில் முறத்தைக்கொண்டு நெல்லை தூற்றிக்கொண்டிருந்த பெண் ஒருவரைத் தாக்கப் புலி ஒன்று வந்ததாகவும் அப்போது துளியும் அஞ்சாமல் அந்த பெண் முறத்தைக் கொண்டே புலியை அடித்து விரட்டியதாகவும் சொல்வார்கள். அதுபோலத் தான் இந்த நபரும் துளியும் அஞ்சாமல் தோசைக் கல்லைக் கொண்டு புலியை விரட்டி ஓடவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications