சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய அணியில் "கம்பேக்" தரும் முக்கிய ஆல் ரவுண்டர்.. இன்று அணியில் முக்கிய மாற்றம்! தமிழருக்கு செக்

Google Oneindia Tamil News

சிட்னி: இந்தியா வங்கதேசம் இடையிலான டி 20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்த தொடரில் இரண்டு வெற்றிகள், ஒரு தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் இந்தியா பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதனால் இன்று நடக்கும் வங்கதேசம் அணிக்கு எதிரான முக்கியதுவம் பெற்றுள்ளது.

3 போட்டிகளில் 22 ரன்கள்.. 3 போட்டிகளில் 22 ரன்கள்..

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

இன்று நடக்கும் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடக்க உள்ளது. அங்கு நேற்று வரை மழை பெய்யும் என்று கணிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் இன்று காலை வெளியான கணிப்பில், மாலை வரை மழை பெய்யாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா ஆடும் மேட்ச் பிற்பகல் நடக்க உள்ளது. இதனால் இந்தியா - வங்கதேசம் அணிக்கு மழை காரணமாக பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்பின்

ஸ்பின்

இந்த பிட்ச் பொதுவாக ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றது ஆகும். இங்கு சராசரியாக முதல் இன்னிங்ஸ் ஆடும் அணிகள் 164 ரன்கள் எடுத்து உள்ளன. இங்கு சேசிங் செய்யும் அணி 9 முறை வென்றுள்ளது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 16 முறை வென்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே முயற்சி செய்யும்.

அணி மாற்றம்

அணி மாற்றம்

ஆனால் கடந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தும் தோல்வி அடைந்ததால், இன்று இந்த பிட்சில் டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா வங்கதேசம் இடையே டி 20 உலகக் கோப்பையில் 11 போட்டிகள் நடந்து உள்ளன. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2016ல் பெங்களூரில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. கடைசி பாலில் தோனி செய்த அந்த ரன் அவுட்டை யாரும் மறக்க முடியாது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடுவது சந்தேகம் ஆகி உள்ளது. கடந்த போட்டியில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆடுவது சந்தேகமாக உள்ளது. அதேபோல் வங்கதேசம் அணி ரிஸ்ட் ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக கடுமையாக திணறும். அதனால் இன்று அஸ்வினுக்கு பதிலாக சாஹல் களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளன.

வங்கதேசம்

வங்கதேசம்

அதே சமயத்தில் வங்கதேசத்தில் டாப் ஆர்டரில் 4 லெப்ட் ஹேண்டர்கள் இருப்பதால் அஸ்வினுக்கு தொடர் வாய்ப்பு அளிக்கப்படும் வாய்ப்பும் உள்ளன. மற்றபடி கடந்த போட்டியில் ஆடிய தீபக் ஹூடா இன்று ஆடும் வாய்ப்பு இல்லை. மீண்டும் அக்சர் பட்டேல் அணியில் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் இன்று ஆடும் இந்தியாவில் ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் / பண்ட் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் / சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று ஆட வாய்ப்புகள் உள்ளன.

English summary
India vs Bangladesh match T 20 World Cup: What will be the playing 11 of men in Blue?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X