சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டிரஸை கழட்டி.." ஒரே நேரத்தில் பீச்சில் நிர்வாணமாக போஸ் தந்த 2500 பேர்! உற்று பார்த்த ஃபோட்டோகிரபர்

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரை ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் டிரஸை கழட்டி நிர்வாணமாக இருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள கடற்கரை சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் செல்லும் கடற்கரையாக அது உள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த பீச்சில் திடீரென ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா போட்ட கோடு.. ரோடு போடும் இந்தியா.. சர்வதேச அளவில் மாஸ்! தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா போட்ட கோடு.. ரோடு போடும் இந்தியா.. சர்வதேச அளவில் மாஸ்!

 நிர்வாணம்

நிர்வாணம்

உலகெங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசும், தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பீட்டா போன்ற அமைப்புகள் மிருக வதைக்கு எதிராகவும் வீகன் உணவு முறையைப் பிரபலப்படுத்தவும் சில யுக்திகளைக் கையாள்வார்கள். அதாவது மிகவும் பிரபலமான நபர்களை வைத்து நிர்வாண ஃபோட்டோஷூட் நடத்தி இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

 2500 பேர்

2500 பேர்

இதில் ஹாலிவுட்டை சேர்ந்த பல நடிகர், நடிகைகள், மாடல்கள் போஸ் கொடுத்து உள்ளனர். இதற்கிடையே அப்படியொரு விழிப்புணர்வு நிகழ்வு தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிட்னி கடற்கரையில் சுமார் 2,500 பேர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து உள்ளனர். இதனை அமெரிக்கப் புகைப்படக் கலைஞரான ஸ்பென்சர் டுனிக் புகைப்படம் எடுத்து உள்ளார்.

 ஆடைகள் இல்லாமல்

ஆடைகள் இல்லாமல்

உலகின் மிக பிரபலமான இடங்களில் அதிகப்படியான பொதுமக்களை நிற்கவைத்து நிர்வாண புகைப்படம் எடுத்துப் புகழ்பெற்றவர் ஸ்பென்சர் டுனிக். தோல் கேன்சருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2,500 பேரை ஆடைகளின்றி அவர் புகைப்படம் எடுத்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தொலை தூரத்தில் உயரமான இடம் ஒன்றில் இருக்கும் போட்டோ கிராபர், அந்த 2500 பேரையும் வித்தியமான போஸ்களை தரச் சொல்கிறார். அங்கிருந்தபடியே அதை ஃபோட்டாவாக எடுத்துள்ளார். பின்னர் அவர்கள் அத்தனைப் பேரும் சிட்னி கடலில் குளித்தனர்.

 கேன்சர்

கேன்சர்

உலகில் இப்போது வேகமாகப் பரவும் மிகவும் ஆபத்தான கேன்சர்களில் ஒன்றாக இந்த மெலனோமா தோல் புற்றுநோய் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அதிகம் பரவும் புற்றுநோய்களில் இது நான்காவது இடத்தில் இருக்கிறது. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இந்த மெகா ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டு உள்ளது. இந்தாண்டு மட்டும் ஆஸ்திரேலியாவில் சுமார் 17,756 பேருக்கு புதிய தோல் புற்றுநோய் கண்டறியப்படும் என்றும் கூறப்படுகிறது. 1281 பேர் ஆஸ்திரேலியாவில் மட்டும் இந்த நோயால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

 ஃபோட்டோகிராபர்

ஃபோட்டோகிராபர்

இது தொடர்பாக ஃபோட்டோகிராபர் டுனக் கூறுகையில், "தோல் கேன்சர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.. இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.. பொதுமக்கள் தங்கள் உடலைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். உடலில் ஏற்படும் பாதிப்புகளைத் தக்க நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்" என்று அவர் தெரிவித்தார்.

பெண்

பெண்

இதில் நிர்வாணமாக போஸ் கொடுத்த இளம் பெண் ஒருவர் கூறுகையில், "இதில் சுமார் 2500 பேர் நிர்வாணமாக போஸ் கொடுத்தனர். முதலில் இது எனக்கு மிகவும் பயமாகவே இருந்தது. இதை நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஆனால், இதை நாங்கள் நல்ல ஒரு நோக்கத்திற்காகச் செய்துள்ளோம். பொதுமக்களுக்கு இதன் மூலம் கேன்சர் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் அது நல்லது தான்" என்றார். உலக அளவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் கேசன்கர்களில் முக்கியமான ஒன்றாக இந்த மெலனோமா தோல் புற்றுநோய் உள்ளது குறிப்பிடத்தக்கது. தக்க நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தரவில்லை என்றால் எளிதாக மரணங்கள் ஏற்படும்.

English summary
More than 2,500 people took off their clothes in an effort to raise awareness on skin cancer: Australia naked photoshoot for skin cancer awareness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X