For Daily Alerts
Just In
நாகர்கோவில் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்- 10 பேருந்துகள் சேதம்; பொதுமக்கள் மறியல்
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் 10 பேருந்துகள் சேதமடைந்தன. இதனையடுத்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள், விவசாய அமைப்புகள் நாளை முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு வியாபாரிகள் சங்கமும் முழு ஆதரவைத் தந்துள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு திடீரென நாகர்கோவில் அருகே மர்ம நபர்கள் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 10 பேருந்துகள் சேதமடைந்தன.
இதையடுத்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பெரிதும் அவதிக்குள்ளான பொதுமக்கள் மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
Comments
cyclone ockhi kanyakumari fishermen bandh bus stone pelting கன்னியாகுமரி மீனவர்கள் மாயம் பேருந்துகள் கடையடைப்பு கல்வீச்சு
English summary
At least 10 buses were damaged in stone pelting and traffic was disrupted in Nagercoil.
Story first published: Thursday, December 14, 2017, 23:20 [IST]