• search

மேட்டூர் அணை : 10 சுவாரஸ்ய தகவல்களை நீங்கள் அறிவீர்களா?

By Bbc Tamil
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  மேட்டூர் நீர் தேக்கம் என்றழைக்கப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். அணை கட்டப்பட்ட 84 வருடங்களில் 39 வதுமுறையாக நீர்மட்டம் 120 அடியை தொட்டுள்ளது.

  மேட்டூர் அணை
  BBC
  மேட்டூர் அணை
  • கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு அணை நிறைந்ததும், ஆரவாரித்தும் பிரவாகமெடுத்து ஓடும் காவிரி ஆறும் பாசனத்திற்கு வெளியேறும் உபரி நீரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மனதில் புது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மேட்டூர் அணையினால் சேலம்,நாமக்கல், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகின்றது. தண்ணீர் அளவு அதிகரிக்கப்பதால் கடைமடை விவசாயிகள் வரை மகிழ்ச்சியில் உள்ளனர்.
  • தண்ணீர் குறைந்த காலங்களில் இந்த அணையை சார்ந்தும், அணை அருகே வாழும் விவசாயிகள் முழுமடை விவசாயத்தின் மூலம் நெல் , கரும்பு ,கோதுமை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்கின்றனர். மீனவர்களோ அணையின் நடுவே உள்ள நீர்பிடிப்பு பகுதியில் மீன்கள் பிடித்து வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்துக்கொள்கின்றனர்.
  மேட்டூர் அணை
  BBC
  மேட்டூர் அணை
  • இந்த அணையில் 2,400 மீன்பிடிப்படகுகள் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. விவசாயிகள் அணைக்கு நீர் வரத்து உள்ள மடை படுகைகளிலும் , நீர்பிடிப்பு உள்ள பகுதிகளுக்கு அருகிலும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர், தற்போது நிறைந்துள்ள மேட்டூர் அணை மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • அணையின் வரலாறினை பார்க்கும் போது மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது . 10ஆயிரம் பணியாளர்களை கொண்டு 9ஆண்டு கால உழைப்பின் பயனாக 1934ஆம் ஆண்டு கட்டிமுடிக்கபட்ட இவ்வணையின் அதிகபட்ச உயரம் 214அடி, இதன் நீர் தேக்கஅளவு 120 அடி உயரமாகும் .
  • 1700 மீ நீளமும், 171அடி அகலம் கொண்ட 9347 கோடி கனஅளவு நீர் தேக்க கொள்ளளவு கொண்ட இந்த நீர்தேக்கத்திற்க்கான நீர்வரத்து கர்நாடக மாநிலத்தின் கபினிஅணை மற்றும் கிருஷ்ணராஜாசாகர அணைகளிலிருந்து பெறப்படுகின்றது.
  • 16 கண் மதகுகள் கொண்ட இந்த அணையில் இரண்டு சுரங்க மின்நிலையங்கள் உண்டு . இவற்றில் முதல் மின்நிலையம் பிரிடிஷ் ஆட்சிக்காலத்திலும் , இரண்டாம் மின்நிலையம் இந்திய குடியரசு ஆட்சியிலும் கட்டப்பட்டது.
  • மேட்டூர் அணை பற்றிய நினைவு கொள்ளத்தக்க குறிப்புகள் உள்ளன. 1801 பிரிடிஷ் கிழக்கிந்திய சபை இந்த அணையை கட்ட முயற்சி எடுத்தபோது , மைசூர் சமஸ்தானத்தின் எதிர்ப்பால் இம்முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இரண்டாம் முறையாக 1835 சர் ஆர்தர்காட்டன் என்பவரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு மைசூர் சமஸ்தானத்தின் தொடர் எதிர்ப்பால் இம்முயற்சியும் இரண்டாம் முறையாககைவிடப்பட்டது.
  • ஆனால் 1923 திருவாங்கூர் சமஸ்தனத்திற்குட்பட்டிருந்த திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்பவற்றின் முயற்சியால் 1924 ஆம்ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்தவரும் அப்போது சென்னையில் வசித்து வந்தவருமான ஸ்டான்லி என்ற பொறியாளரை கொண்டு இவ்வணை கட்டபட்டது. அவரின் பெயரால் இவ்வணை ஸ்டான்லி அணை என்றழைக்கப்படுகிறது.
  மேட்டூர் அணை
  BBC
  மேட்டூர் அணை
  • சேலம் மாவட்டத்தின் மேட்டூர் பகுதியில் இவ்வணை நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33கும் மேற்பட்ட கிராமங்கள் இணைத்து கட்டப்பட்ட அணையாகும். கிபி 10ஆம் நுற்றாண்டில் சோழ மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும் ,அதற்க்குபின் கருவறை அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலும் , ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டஇரட்டைகோபுர கிறிஸ்தவ ஆலயமும் இன்றும் அடையாள சின்னங்களாய் அணையின் நடுவில் உள்ளது. கிராமங்கள் அழிந்து, மக்கள் இருப்பிடம் மாறினாலும் அடையாளங்களாய் நினைவு சின்னங்களாய் இன்றும் அம்மண்ணில், அணைக்கு நடுவில் நிலைத்து நிற்கின்றது.அணையின்நீர்மட்டம் 80அடிக்கு கிழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழே குறையும்பபோது கிறிஸ்தவ கோபுரமும் தெரியும்.
  மேட்டூர் அணை
  BBC
  மேட்டூர் அணை
  • 1934 ஆம் ஆண்டில் முதன் முறையாய் ஸ்டான்லி நீர் தேக்கம் நீரில் நிறைந்தது . நீர் இருந்தாலும், குறைந்தாலும் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதோடு சிதைந்த , காலத்தின் அழியா நினைவு சின்னங்களையும் தன்னுள் அடக்கிநின்று காலத்தின் பெருமையை உணர்த்தி மக்கள் மனதை குளிர்விக்கின்றது மேட்டுரின் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  மேட்டூர் நீர் தேக்கம் என்றழைக்கப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். அணை கட்டப்பட்ட 84 வருடங்களில் 39 வதுமுறையாக நீர்மட்டம் 120 அடியை தொட்டுள்ளது

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற