For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தகதக' தஞ்சையில் 104 டிகிரி பாரன்ஹீட்.... மக்கள் ரியாக்ஷன்- "அவ்வ்வ்...."

தஞ்சையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததை அடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டங்கள் குறைந்து விட்டன. விளை நிலங்கள் பாளம் பாளமாக வெடித்து வருகின்றன.

104 fahrenheit hot in Thanjavur: People affected

கோடை தொடங்குவதற்கு முன்னரே தண்ணீருக்காக மக்கள் குடங்களை தூக்கி கொண்டு அலையும் காட்சிகள் அரங்கேறின. சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்றால் அங்கும் அதே நிலை நிலவுகிறது.

கடந்த பல நாள்களாக கரூர், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்துவந்தது. எனினும் நாகர்கோவில், ஆரணி, குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது.

தஞ்சை தகிப்பு

பல இடங்களில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடையும் அளவுக்கு காற்றுடன் மழை பெய்து வந்தனர். இந்நிலையில் தஞ்சாவூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை பிற்பகலில் இருந்து மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன.

English summary
Thanjavur touches 104 degree Fahrenheit temparature.People residing in the interior parts are afftected by heat wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X