திருச்சியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதில் தாமதம்... அதிகாரி குளறுபடி.. மாணவர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

10 லட்சம் மாணவ, மாணவியர் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அந்ததந்த மாவட்டத்தில் காலை சரியாக 10 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.

10th result delayed in Trichy

ஆனால், திருச்சியில் மட்டும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தேர்வு முடிவுகளை வெளியிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் முடிவுகள் வெளியாகவில்லை என்று மாணவர்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள். கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் முடிவுகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் ஏற்படுத்தினார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
10th Result was released delayed by education officer in Trichy, Students shocked.
Please Wait while comments are loading...