இனி இவங்கதான் டீவில வருவாங்க.. அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுக எம்.எல்.ஏ கூட்டம்...வீடியோ

  சென்னை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முன்பு செய்தித் தொடர்பாளர்களாக சிலருக்கு இதில் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.

  இன்று காலை சென்னையில் அதிமுக கட்சி கூட்டம் நடைபெற்றது. 104 சட்டசபை உறுப்பினர்கள் அதிமுக கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

  12 member spoke person for ADMK has announced

  இந்த நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன் போன்ற முக்கிய நபர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார்கள்.

  அதேபோல் பேராசிரியர் தீரன், கே.சி பழனிசாமி, பாபு முருகவேள், மகேஸ்வரி, கோவை செல்வராஜ், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு சென்ற மருது அழகுராஜூம் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

  இந்த 12 பேரை தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் ஊடகங்களில் பேச கூடாது என கூட்டத்தில் முடிவாகி இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களாக இருந்த ஆவடி குமாருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  12 member spoke person for ADMK has announced in the party meeting. Aavadi Kumar lost the chance to be a spokes person.Gogula Indira, Valarmathi, Ponnaiyan, Vaikai Selvan got the chance.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற