For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூகுள் மாதிரி பெரிய நிறுவனமா வளரணும்… இளம் விஞ்ஞானியின் கனவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

14-year-old Chennai boy develops i-Safe app for women in distress
சென்னை: ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe' என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன்.

இந்த அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது.

மேலும் உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளை அவர் இப்போது செய்து வருகின்றார்.

இளம் வயதான எஸ் அர்ஜுன், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவர். கடந்த ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் போட்டியில் இவர் உருவாக்கிய Ez ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் என்ற அப்ளிக்கேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது.

ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி பேருந்தின் இடத்தை கண்காணிக்கவும் மற்றும் வாகனம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பற்றி கணக்கிட உதவுகிறது.

அதேபோல், அடிப்படை போன்களிலும் இந்த அப்ளிக்கேஷனை எஸ்எம்எஸ் மூலமாகவும் பயன்படுத்த முடியும். முன்னதாக, எம்ஐடியில் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் இன்வென்டர் பக் ஃப்பைன்டிங் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டரை வயசு இருக்கும்போதே கம்ப்யூட்டர் பழக ஆரம்பித்த அர்ஜூன் தினமும் மூணு மணி நேரம் இன்டர்நெட்டில் செலவு செய்வாராம். ஃபேஸ்புக், ட்விட்டர் என்று டைமை வேஸ்ட் செய்யாமல் சீக்கிரமே புரோகிராம் கோட் எழுதக் கற்றுக் கொண்டாராம்.

அவருடைய பெரிய கனவு கூகுள் மாதிரி ஆசியாவிலேயே பெரிய நிறுவனமா தன்னுடைய லேட்ரல் லாஜிக் இந்தியா நிறுவனத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான்.

''கம்பெனியோட மோட்டோவே டிசைன் செய்துவிட்டாராம். 'பெரிய கண்டுப்பிடிப்புகள் சிறிய பிரச்னைகளில் இருந்தே உருவாகிறது'!'' என்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.

அர்ஜூன் பற்றி பெருமை பொங்க கூறிய அவரது பெற்றோர்கள், புரோகிராமிங் லேங்குவேஜ்-ஐ கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று தெரிவித்தனர்.

மேலும், அவருடைய பள்ளியில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்றும், அவரது ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகள் ரோபாட்டிக்ஸ், செஸ் மற்றும் பேட்மின்டன் உள்ளிட்டவை என்றும் அர்ஜுன் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

English summary
In the wake of increasing atrocities against women, a 14-year old boy from Chennai has developed a mobile app that he has named i-Safe. An SOS mode in the app, when activated will repeatedly send SMS alerts to family and friends, pre-fed in the app, giving the location details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X