For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெயிலுக்கு குட்பை.. தமிழ்நாட்டில் இந்த 17 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை.. குடை மறக்காதீங்க

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் வைத்துச் செய்த வந்த நிலையில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யும் என்ற குட் நியூஸை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் அதிகரிக்கத் தொடங்கிய வெயில் தொடர்ந்து உயர்ந்தே வந்தது. பல இடங்களில் வெப்பம் அசாட்லாக 100 டிகிரி பாரன்ஹூட் வெப்பத்தைக் கூட தாண்டியது. சென்னையில் 105 டிகிரியையும் தாண்டியது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்லக் கூட சிரமப்பட்டனர். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என வானிலை மையமே அறிவுறுத்தியது.

17 districts of Tamil Nadu will get rain says Chennai meteorological dept

இப்படித் தொடர்ந்து அதிகரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனிடையே குட் நியூஸ் ஒன்றை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் மழை:

இன்று மே 26ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல நாளை மே 27ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் மே 28ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் மே 29 மற்றும் மே 30ஆம் தேதிகளில் 30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17 districts of Tamil Nadu will get rain says Chennai meteorological dept

அதிகபட்ச வெப்பநிலை:

இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

26.05.2023 முதல் 28.05.2023 வரை கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்ச தீவு பகுதிகளிலும், 27.05.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளிலும் 28.05.2023 சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Chennai meteorological dept says 17 districts will get tamil: Tamilnadu rain alert today latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X