சேலத்தில் மருத்துவமனை மேலாளர் வீட்டில் பட்ட பகலில் 200 பவுன் கொள்ளை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் மருத்துமனையின் மேலாளர் வீட்டில் பட்டப்பகலில் 200 பவுன் நகைகளும், ரூ. 20 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறார்.

200 Sovereign jewels robbed in Salem

அசோக்குமார் இன்று பணி நிமித்தமாக கோவை சென்றுள்ளார். அவரது மனைவியும் பள்ளிக்கு சென்றுவிட்டார். இந்த சமயத்தில் பட்டபகலில் மர்மநபர்கள் அவரது வீட்டினுள் இறங்கினர்.

அங்கு படுக்கையறையிலிருந்த பீரோவை ஆராய்ந்தபோது அதிலிருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் அங்கிருந்த ரூ.20 லட்சத்தையும் திருடிச் சென்றனர்.

இந்நிலையில் பள்ளியிலிருந்து வீடு வந்த அசோக்குமாரின் மனைவி வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது நகை, மற்றும் பணம் திருடு போயுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக சேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோல் சேலம் பெரியபுதூரில் ஆவின் துணை மேலாளர் சண்முகம் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some Unknown robbed 200 Sovereigns of gold from Salem Ashok kumar's house who works as a Hospital Manager. The cash of Rs. 20 Lakhs also robbed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற