கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த 5 பேருக்கு திடீர் மயக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்ட 5 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று காத்திருப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.

5 were fainted in Kathiramangalam hunger strike

இந்நிலையில் ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்கக் கோரியும் கடந்த 2 நாள்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கதிராமங்கலம் மக்கள் தொடங்கினர்.

அதில் தண்ணீர் கூட குடிக்காததால் சண்முகசுந்தரம், அமுதா, ராஜேந்திரன், முருகானந்தம் , கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் மயக்கமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Few of Kathiramangalam people staged a hunger strike against ONGC, today 5 were fainted and admitted in Kumbakonam Government hospital.
Please Wait while comments are loading...