மழை நிவாரணம்.. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைக் கண்காணிக்க சில தினங்களுக்கு முன்பாக, முனியநாதன் (தாம்பரம் மற்றும் பல்லாவரம்), சிவசண்முகராஜா (செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம்) மற்றும் சுப்பையன் (ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர்) ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

7 more IAS officers appointed to tacle flood situation in Kancheepuram district

மழை தொடரும் நிலையில், பிரவீன்நாயர், அருண்தம்புராஜ், கண்ணன், ஆனந்த், தினேஷ் அலிவார், ஜான் லூயிஸ், அருண் தயாளன் ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை நிவாரண பணிகளை பார்வையிட கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
7 more IAS officers appointed to tacle flood situation in Kancheepuram district by the TN governent.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற