For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாய் 4 முறை, மன்மோகன் சிங் 8 முறை- இந்தியப் பிரதமர்களின் அமெரிக்க பயணம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா - அமெரிக்க இடையிலான உறவினைப் பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபரான ஒபாமா இந்தியா வர உள்ளார்.இதுவரையில் 9 இந்திய பிரதமர்கள் அமெரிக்காவுக்கு நல்லெண்ண பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவினை மேம்படுத்தும் வகையிலும், நல்லிணக்க அடிப்படையிலும் நாட்டின் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது எப்போதும் நடைமுறையில் இருப்பதாகும்.

9 Indian Prime Ministers have visited USA. Manmohan Singh went 8 times, Vajpayee 4

அந்த அடிப்படையில், இந்தியாவில் இருந்து பிரதமராக பதவிவகித்த 9 தலைவர்கள் அமெரிக்கா உடனான நல்லிணக்க பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு:

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1949, 1956, 1960, 1961 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் இந்திய - அமெரிக்க நல்லுணர்வு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

இந்திரா காந்தி:

பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளும், இந்தியாவின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி 1966, 1971, 1982 ஆகிய மூன்று வருடங்களில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

மொரார்ஜி தேசாய்:

அபூர்வமான பிப்ரவரி 29 ஆம் தேதியன்று பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமருமானவர் மொரார்ஜி தேசாய். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும், பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர். இவர் 1978 ஆம் ஆண்டில் அமெரிக்க சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டார்.

ராஜிவ் காந்தி:

இந்திரா காந்தியின் மகனான ராஜிவ் காந்தி அவர்கள், தான் பிரதமராக பதவி வகித்த காலகட்டத்தில் 1985 ஆம் ஆண்டில் இரண்டு முறையும், 1987 ஆம் ஆண்டில் ஒரு முறையுமாக மூன்று முறை அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார்.

பி.வி.நரசிம்ம ராவ்:

பி. வி. நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவர். அவருடைய பதவி காலத்தில் 1992 ஆம் ஆண்டும், 1994 ஆம் ஆண்டும் அமெரிக்க பயணத்தினை மேற்கொண்டார்.

ஐ.கே.குஜ்ரால்:

இந்திர குமார் குஜ்ரால் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942 இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவர் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அட்டல் பிஹாரி வாஜ்பாய்:

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் பங்கேற்று பின்னர் பிரதமராகிய வாஜ்பாய் 2000 முதல் 2003 ஆம் வருடங்களில் 4 முறை அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மன்மோகன் சிங்:

காங்கிரஸ் கட்சியின் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் 2005 முதல் 2013 வரையிலான வருடங்களில் 8 முறை அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.

நரேந்திர மோடி:

கடந்த வருட நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக பதவி வகிக்கின்ற நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒருமுறை அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நல்லிணக்க அடிப்படையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வர இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As Narendra Modi embarks on his maiden visit to the US, India hopes that it will be a fruitful one. Expectations are high as after a long time India has given a clear majority to the party led by Narendra Modi. People of India trusted Narendra Modi's administrative skills and his willingness to work for the nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X