கோவை பைபாஸ் சாலையில் தீப்பற்றி எரிந்த கார்... குடும்பத்தையே காப்பாற்றியவர் தீயில் கருகினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததில் பெங்களூருவைச் சேர்ந்த திலீப் உடல் கருகி உயிர் இழந்தார்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார். தன் குடும்பத்தாருடன் காரில் கொச்சி சென்று விட்டு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது கார் கோவை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

A car got fired when it was running in Kovai bypass road

உடனே சுதாரித்த தீலிப் தன் குடும்பத்தினரை காரில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றினார். இதனால் அவர்களுக்கு எந்த சிறு காயமும் ஏற்படவில்லை.

ஆனால், திலீப் சீல்ட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தால் எவ்வளவு முயன்றும் அவரால் உடனே இறங்கமுடியவில்லை. இந்த நேரத்தில் தீ மளமளவென எரிந்து குடும்பத்தினர் கண்முன்னே திலீப் நெருப்பில் கருகி இறந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A car got fired when it was in travel and jewwlery owner Dilip died in that accident and fortunately he saved his family.
Please Wait while comments are loading...