For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலில் சிலிண்டர் வெடித்ததாக நினைத்தோம்.. குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய பெங்களூர் குடும்பம் பேட்டி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: டார்ஜிலிங்கிற்கு விடுமுறையை கழிக்க கவுகாத்தி எக்ஸ்பிரஸில் கிளம்பிய பெங்களுரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் இன்றி பிழைத்ததை நினைத்து கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள ப்ரோஎக்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்ரீஹர்ஷா சாலிமத். அவரது சொந்த ஊர் தாவணகரே. அவர் தனது மனைவி சிந்து, குழந்தைகள், உறவினர்கள் என்று 8 பேருடன் விடுமுறையை கழிக்க மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிற்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸில் கிளம்பினார்.

அவர்களின் ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தபோது அதில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற ஆந்திர மாநில பெண் பலியானார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீஹர்ஷா ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

Image Courtesy: Sriharsha Salimath

சிலிண்டர் வெடிப்பு

சிலிண்டர் வெடிப்பு

ரயிலில் திடீர் என்று ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் நாங்கள் சிலிண்டர் தான் வெடித்தது என்று நினைத்தோம். பின்னர் தான் குண்டுகள் வெடித்தது தெரிய வந்தது.

போலீசார்

போலீசார்

போலீசார் பயணிகளுக்கு தைரியம் கூறி அவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கி ஆசுவாசப்படுத்தினர்.

உடைமைகள்

உடைமைகள்

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு போலீசார் ரயில் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.

பயணிகள்

பயணிகள்

குண்டுவெடிப்பு சம்பவத்தால் கவுகாத்தி எக்ஸ்பிரஸில் மீண்டும் பயணிக்க பயந்து யாரும் திரும்பவில்லை. அனைவரும் ரயிலில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை போலீசாருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

English summary
Bangalore based Passenger Sriharsha Salimath spoke to Oneindia about the Twin bomb blasts at Chennai Central railway station. Salimath along with his family is travelling to Darjeeling through Guwahati-Bangalore Express He thanked police and commandos for necessary arrangements for the passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X