வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்.. நெல்லையில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் போலீஸ்காரரையும் அவரது நண்பரையும் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்த இன்பராஜ் என்பவர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஆலங்குளத்தில் வசித்து வரும் இவர் தனது நண்பரான ஆட்டோ டிரைவர் இசக்கி முத்துவுடன் அடிக்கடி வெளியே சென்று வருவார் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் நேற்று வழக்கம்போல ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கழுநீர்குளத்துக்கு சென்றனர். அங்கு முருகன் என்பவரின் மனைவி அன்னம் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.

பெண்ணிடம் அத்துமீறிய போலீசார்

பெண்ணிடம் அத்துமீறிய போலீசார்

அப்போது தனியாக இருந்த அவரிடம், பட்டப்பகலில் அத்துமீறி கையை பிடித்து இழுத்து அவதூறாக பேசியுள்ளனர். மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர்.

மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த அன்னம் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து இன்பராஜையும், இசக்கிமுத்தையும் மடக்கி பிடித்தனர். பின்பு அவர்கள் 2 பேரையும் வீரகேரளம்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை

வழக்குப்பதிவு செய்து விசாரணை

அப்போது போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறி அன்னம் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்பராஜ், ஆட்டோ டிரைவர் இசக்கிமுத்து ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துறைரீதியிலான நடவடிக்கை

துறைரீதியிலான நடவடிக்கை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் வீடு புகுந்து தவறாக நடந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் இன்பராஜ் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரே தனது நண்பருடன் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Police inspector was misbehaving with a lady who was alone in the home in Nellai district. public caught them and handed over to the police.
Please Wait while comments are loading...