For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்டராக துடிக்கும் ஏழை மாணவன் தினேஷுக்கு உதவுங்களேன்!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: படிப்பு...இந்த ஒற்றைச் சொல் பணத்தை விட மேலானது. அதனால்தானோ என்னவோ ஏழைகளுக்கு அது எட்டாக் கனியாகவே உள்ளது.

அப்படி ஏழ்மையான குடும்பத்தில், பள்ளிக் கூடத்தையே மிதிக்காத பெற்றோருக்கு மகனாகப் பிறந்து மருத்துவராக அனைத்து தகுதிகளும் இருந்தும், பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் பெற்றும் இன்னும் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்ற ஒரு மாணவன் தான் தினேஷ் குமார்.

புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு சுண்டாங்கி வலசை கிராமத்தில் சகுந்தலா, கணபதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த மாணிக்கம் அவன்.

A true soul need help for become a doctor

தினேஷின் அப்பா மனநிலை பாதிப்படைந்தவர். தள்ளுவண்டி, கூடை முடைதல் என்றெல்லாம் கஷ்டப்பட்டு தினேஷைப் படிக்க வைத்துள்ளார் அவரது அம்மா சகுந்தலா. அவருடைய வைராக்கியம்தான் தினேஷை பிளஸ் 2வில் சாதிக்க வைத்துள்ளது.

அவரது அக்கா ரம்யாவையும், சகுந்தலா கடன் வாங்கி பொறியியல் படிக்க வைத்துள்ளார். அடுத்த மகள் தீபாவும் நர்சிங் முடித்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் சகுந்தலா முடங்கிய வேளையில், கிட்டதட்ட 1123 மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார் தினேஷ்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் பணமில்லாத காரணத்தினால் முடங்கிப் போயுள்ளார் அவர். கிட்டத்தட்ட 196.50 கட்.ஆப் பெற்று இந்த இடத்தினைப் பெற்றுள்ளார் தினேஷ். அட்மிஷன் போட மட்டுமே கடன் வாங்கி சேர்ந்த நிலையில் தற்போது மற்ற செலவுக்கெல்லாம் பணமில்லாமல் தவித்து வருகின்றார் தினேஷ்.

ஏற்கனவே அவரது அக்கா பொறியியல் படிக்க கடன் வாங்கியதால் வங்கியிலும் வழியில்லை. ஏழைகளான நாங்கள் படிக்கவே ஆசைப்படக் கூடாதா என்று தினேஷ் கேட்ட கேள்வி அப்டியே உருக்குவதாய் அமைந்தது. பெரிய, பெரிய பண முதலைகளுக்கெல்லாம் எளிதாக கிடைக்கும் வங்கிக் கடன், ஏழைகளான மாணவர்களுக்கு கல்விக் கடனாக கிடைத்தாலும் ஆயிரத்தெட்டு கேள்விகள்...விசாரணைகள்.... ஏழையாப் பிறந்தால் கல்வி என்பது எட்டாக் கனியாக இருக்க வேண்டியது கட்டாயமில்லை.

நமக்குள்ளேயே மனிதம் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தட்டி எழுப்பி ஒரு திறமைசாலியை சீர் தூக்கி விடவேண்டியது நமது கடமையல்லவா? எங்களுக்கு தெரியும் நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள்...ஏனெனில், மனிதம் இன்னும் மரித்துப் போய்விடவில்லை!

மாணவன் தினேஷின் தொடர்பு எண்: 0-9047848635

English summary
Dinesh kumar, a knowledge victim of studies cannot afford his Higher studies due to money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X