For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் இருந்து விலகினார் ஆனந்தராஜ் - சசிகலா பொதுச்செயலாளராக எதிர்ப்பு

ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் நான் நீடிக்க விரும்பவில்லை என்றும் வேறு கட்சியில் நான் இணையப் போவதில்லை என்றும் நடிகர் ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார் நடிகர் ஆனந்தராஜ்.

நாளை அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தராஜ், அதிமுகவில் சசிகலா முன்னிலைப்படுத்துவதைக் கண்டித்து அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Actor Anandaraj quits from ADMK

ராசியான நடிகர் என தொண்டர்கள் அழைத்தனர். தனிப்பட்ட விதத்தில் யாரும் எதிரிகள் இல்லை, அதிமுகவில் இருந்ததால் நான் விமர்சித்தேன்
கருணாநிதியின் பெயரை சொன்னதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். திரைப்பட கல்லூரியில் சிறந்த மாணவர் விருதை தந்தவர் கருணாநிதி
கருணாநிதிக்கு நான் தந்தது வலி மட்டுமே என்று கூறினார்.

ஜெயலலிதாவின் ஆன்மா இன்னமும் உயிரோடு இருக்கிறது. தேடித் தேடி செய்தேன் என்று கூறியிருக்கிறார் ராம் மோகன் ராவ். அவரது குற்றச்சாட்டுக்கு முதல்வரும், தற்போதய தலைமை செயலாளரும் தரவேண்டும்.

நான் ராமருக்கு உதவிய அணிலைப் போல இருந்தேன். வேறு கட்சியில் நான் இணையப் போவதில்லை. நாளை ஆண்டவன் கட்டளை எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஜெயலலிதாவின் பெயரை பல தரப்பினரும் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ஆனந்தராஜ்.

பொன்னையன், செங்கோட்டையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. சசிகலா பொறுப்பேற்க இது தகுதியான நேரமில்லை. ஜெயலலிதா உடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசக்கூடாது. அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கட்சி தலைமையை அடையாளம் காட்ட பொன்னையனுக்கு தகுதியில்லை. நடக்கிற சம்பவங்களைப் பார்த்தால் சங்கடம் வரும் போல தெரிவதால் நான் விலகிக் கொள்கிறேன். நான் ஒரு நடிகராக மட்டுமே இப்போது கருத்து கூறுகிறேன். வேறு கட்சியில் நான் இணையப் போவதில்லை. அதே நேரத்தில் கடவுள் சித்தம் என்னவாக இருக்கும் என்பது தெரியாது என்றும் ஆனந்தராஜ் தெரிவித்தார்.

English summary
Actor Anandaraj quit from the ADMK party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X