கமலை பற்றி பேச எச்.ராஜவுக்கு என்ன தகுதி இருக்கு? நடிகர் மயில்சாமி ஆவேசம்
புதுக்கோட்டை: கமல்ஹாசனை பற்றி பேச பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜவுக்கு என்ன தகுதி இருக்கு என நடிகர் மயில்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இவர்களின் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியுள்ளது. இதில் நடிகர் மயில்சாமி இன்று கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அரசு நடப்பது போல தெரியவில்லை. எப்போது எந்த கூட்டத்துக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக செல்வேன். ஆனால் நெடுவாசலுக்கு தான் வருத்தத்துடன் வந்திருக்கிறேன். 100 நாட்கள் மக்களை போராட செய்தது அரசுகளின் குற்றம் தான் எனக் குற்றம்சாட்டினார்.
அப்போது எச்.ராஜா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மயில்சாமி, எச்.ராஜா யாருங்க. அவரை யாருக்கு தெரியும். முதல்ல அவரை ஒரு தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டு வரச் சொல்லுங்க. அப்பறம் நடிகர் கமலை பற்றி பேசட்டும். எச்.ராஜா தேர்தல்ல நிற்கட்டும் அந்த தொகுதியில் கமலை நிறுத்துகிறேன் ஜெயிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய மயில்சாமி, கமலை பற்றி பேச எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு எனக் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications