தாஜ்மஹால் இருக்கட்டும், விவசாயிகளை பாருங்க.. பிரகாஷ் ராஜ் நறுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் திப்பு சுல்தான், தாஜ்மஹால் வரலாற்றை தோண்டி எடுத்து அரசியல்வாதிகளை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரப்பிரதேச அரசு தனது சுற்றுலாத்தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை அண்மையில் நீக்கியது. தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்தது.

 Actor Prakash Raj asks why for digging history of Tippu Sultan and Tajmahal?

மேலும் ஷாஜஹான் இந்துகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும் பாஜக பிரமுகர்கள் சிலர் கூறிவந்தனர். இதையடுத்து கர்நாடகாவில் நவம்பர் 10-ம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

திப்பு சுல்தான் மாவீரர் என்பதை ஏற்க முடியாது இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் எதிராக செயல்பட்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும் பாஜக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் படி நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு, சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு நிர்வாகம் மற்றும் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.

தேவையில்லாமல் திப்பு சுல்தான், தாஜ்மஹால் வரலாற்றை தோண்டி எடுத்து நேரத்தை அரசியல்வாதிகள் வீணடிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டி விடுவோம் என்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து பாஜகவை கண்டித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவுகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Prakash Raj says that why the politicans were wasting time by digging history of Tippu Sultan and Tajmahal instead of focusing on farmer's interests.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற