ஆன்மிக அரசியல் என்றால் என்ன? நிருபர்களுக்கு ரஜினி சொன்ன அசால்ட் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil
  ஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் - ரஜினி அதிரடி

  சென்னை : விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக ரஜினி இன்று தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசியல்களம் பரபரப்பாகி உள்ளது.

  நீண்ட நாட்களாக தனது அரசியல் பிரவேசம் கேள்விக்கு ரஜினி இன்று பதிலளித்து உள்ளதை அடுத்து, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தனித்து போட்டியிடுவாரா, கூட்டணி அமைப்பாரா, என்னென்ன கொள்கைகள் என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

  இந்நிலையில், மேடையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி தான், தனது அரசியல் பாணி ஆன்மிக அரசியல் என்றும், தமிழக அரசியல் களத்தை பற்றி கொஞ்ச நாட்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் அதற்கு பதில் மன்றங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

   கேள்விகள்

  கேள்விகள்

  அரசியலுக்கு வருவேன், தனிக்கட்சி ஆரம்பிப்பேன்,சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசி இருந்தாலும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன்? கட்சி பெயர் எப்போது அறிவிக்கப்படும் ? மக்கள் சந்திப்பு எப்போது ? கொள்கைகள் என்ன? என்று பல்வேறு விதமான கேள்விகள் எழுந்து உள்ளது.

   நியாயமான அரசியல்

  நியாயமான அரசியல்

  இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து கிளம்பிய ரஜினியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆன்மிக அரசியல் என்பது நியாமான, தர்மமான முறையிலான அரசியல் என்று ரஜினி பதிலளித்தார்.

   காத்திருங்கள்

  காத்திருங்கள்

  மேலும், மக்களை எப்போது நேரில் சந்திப்பீர்கள், கட்சி பெயர் என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தனக்கு பதில் தெரியாது என்றும், அதற்கு காலம் பதில் சொல்லும் அதுவரை காத்திருங்கள் என்றும் பதிலளித்து உள்ளார்.

  நன்றி

  நன்றி

  தனது அரசியல் அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து உள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Rajinikanth answers what is meant by Spiritual Politics . He also answers for when he will announce His Party Name and Policies.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X