அடுத்து என்ன பண்ணலாம்.. மன்ற நிர்வாகிகளுடன் ஒரு மணிநேரம் ஆலோசித்த ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த கட்ட செயல்பாடு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கட்சி மற்றும் சின்னம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். அதேநேரத்தில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ராகவேந்திர மண்டபம்

ராகவேந்திர மண்டபம்

இந்நிலையில் தனது கட்சிக்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

ஒரு மணிநேரம்

ஒரு மணிநேரம்

மக்கள் மன்ற நிர்வாகிகள் சுதாகர், ராஜ மகாலிங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

வீடியோ கான்ஃபிரன்ஸிங்

வீடியோ கான்ஃபிரன்ஸிங்

அப்போது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் நிர்வாகிகளுடன்
ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம்

வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம்

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது மாவட்ட வாரியாக நேரில் சென்று கள ஆய்வு செய்யலாமா அல்லது வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலமே நிர்வாகிகளை நியமிக்கலாமா என ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth conducts meeting with his fans club executives. Actor Rajinikanth had an hour-long consultation with the executives for the next phase.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற