ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் பெயர் மாற்றம்.. தொடரும் ரஜினியின் அரசியல் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். அவரது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது.

Actor Rajinikanth fans club name has been changed

தனது அரசியல் வருகைக்காக நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகின்றார். அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கையோடு இணையதளம் வாயிலாக உறுப்பினர்களை சேக்கும் பணியில் இறங்கினார் ரஜினிகாந்த்.

அடுத்த 2 நாளில் பத்திரிக்கையாளர்களை தனியாக சந்தித்தார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஆர்எம் வீரப்பன் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

இந்நிலையில் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை அதிரடியாக மாற்றியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தின் பெயர் ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரிலேயே இதுவரை இருந்து வந்தது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இணையதளத்தில் பெயரை ரஜினி மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth fans club name has been changed. It was all india Rajinikanth fans club now its changed as Rajaini peoples club.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X