For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே. நகரில் எதுவுமே சரியில்லை... என் பின்னால் யாருமில்லை - விஷால்

சுயேட்சையாக போட்டியிடும் தம்மை எதிரியாக கருதுவது ஏன் என்று நடிகர் விஷால் கேட்டுள்ளார். தேர்தல் அதிகாரியின் செயல் தவறான முன்னுதாரணம் என்றும் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!- வீடியோ

    சென்னை: ஆர்.கே. நகரில் என்னுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் பின்னர் நிராகரித்தது ஏன் என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு முறைகேடு நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    நடிகர் விஷால் வேட்பு மனுவை ஆர்.கே.நகரில் வசிக்கும் 10 பேர் முன்மொழிந்திருந்தனர். அதில், 3 பேர் நாங்கள் முன்மொழியவில்லை. போலி கையெழுத்து போட்டுள்ளனர் என்று தேர்தல் அதிகாரி முன்பு தெரிவித்தனர். இதனால் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    விஷால் முறையிடவே அவரது வேட்புமனுவை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. சில திருத்தங்களுக்குப் பிறகு விஷால் அளித்த ஆதாரங்களை ஏற்று மீண்டும் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக வெளியே வந்த விஷால் தெரிவித்துவிட்டு சென்றார்.

    11 மணிக்கு விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    ஏற்றுக்கொண்டு நிராகரிப்பதா?

    ஏற்றுக்கொண்டு நிராகரிப்பதா?

    இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷால், வேட்புமனு ஏற்கப்பட்டதாக முதலில் அதிகாரி கூறினார். நான் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து சென்றேன். நிராகரித்ததாக கூறினால் நான் ஏன் கை குலுக்குகிறேன்.

    தேர்தல் அதிகாரி

    தேர்தல் அதிகாரி

    அதிகாரிகள் கீழே போய் பேசிவிட்டு வந்து நிராகரிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆர்.கே. நகரில் முறைகேடு நடக்கிறது. எல்லோருடைய வேட்புமனுவையும் பரிசீலிக்கும் அதிகாரி, கீழே போய் யாரிடம் பேசிவிட்டு வந்து நிராகரிப்பதாக கூறுகிறார் என்று தெரியவில்லை. அதிகாரிகளே இப்படி செய்யலாமா?

    பாகுபாடு பார்க்கவில்லை

    பாகுபாடு பார்க்கவில்லை

    சுயேட்சையாக போட்டியிடும் தன்னை எதிரியாக கருதுவது ஏன்? நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே சாதி, மத பாகுபாடுகள் பார்த்ததில்லை. இப்போது தேர்தலில் போட்டியிடும் போது என்மீது சாதி முத்திரை குத்த பார்ப்பது ஏன்?

    அதிகாரியை மாற்றினால் எல்லாம் மாறிடுமா?

    அதிகாரியை மாற்றினால் மட்டும் எதுவும் நடந்து விடாது. எதற்காக அதிகாரியை மாற்றுகிறார்கள் என்று பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டார். ராதிகாவின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தன்னைப்பற்றி விமர்சிக்வோ, கருத்து கூறவோ அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.

    English summary
    Vishal questioned the Election commission decision and termed it mocekery of democracy.I would challenge this legally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X