For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாத்தாக்கள் ஹீரோக்களாக நடிக்கும்போது நாங்க நாயகிகளாகக் கூடாதா?, யாரை கலாய்க்கிறார் கஸ்தூரி?

தாத்தாக்கள் ஹீரோக்களாக நடிப்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் இளம் நடிகைகளாக இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு நடித்தால் ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சமந்தாவை பாத்து எப்படி அப்படி கேட்கலாம்?-வீடியோ

    சென்னை: தாத்தாக்களை கதாநாயகர்களாக ஏற்றுக் கொள்கிறீர்கள், ஆனால் இளம் கதாநாயகிகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரை ஏற்க மறுக்கிறீர்கள் இது ஏன் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

    எந்த விவகாரமாக இருந்தாலும் உடனுக்குடன் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை
    நடிகை கஸ்தூரி வெளியிட்டு வருகிறார். ரஜினி, கமல் அரசியல் தொடங்கி, நீட் தேர்வு வரை அவர் அனைத்துக்கும் தனது கருத்தை முன்வைக்கிறார். சில நேரங்களில் தன்னை பின்தொடர்பவர்களுடன் சாதாரணமான உரையாடலையும் மேற்கொள்கிறார்.

    அந்த வகையில் நடிகை சமந்தாவுக்கும், மூத்த நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோவாவில் திருமணம் நடைபெற்றது.

    நடிகை நடிப்பாரா? என கேள்வி

    நடிகை நடிப்பாரா? என கேள்வி

    இந்நிலையில் பொதுவாக திருமணத்துக்கு பிறகு நடிகைகள் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகு நடிப்பாரா என்று தமிழ் நாளேடு ஒன்று கேள்விஎழுப்பியிருந்தது.

    நாகசைதன்யாவிடம் கேட்கவில்லை

    தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கேள்வியை மேற்கோள் காட்டி, இதை ஏன் நாகசைதன்யாவிடம் கேட்கவில்லை என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவரை டுவிட்டரில் பின் தொடரும் ஒருவர், "உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இன்னும் நாயகனாக நடிக்கிறார்கள். உங்களால் முடியல. அந்த காரணம் தான்" என்று பதிவிட்டிருந்தார்.

    நாங்க ஹீரோயினா நடிக்கக் கூடாதா ?

    நாங்க ஹீரோயினா நடிக்கக் கூடாதா ?

    அதற்கு கஸ்தூரி "ஆனால் ஏன்? அதுதான் என் கேள்வி. தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் நாயகிகளாக
    நடிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை? ஏன்? ஏன்? ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடிக்க அனுமதிப்பது கணவர்தான்

    நடிக்க அனுமதிப்பது கணவர்தான்

    இதற்கு இன்னொரு, "நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் இயக்குநர் திருமணமான நாயகிகளை ஏற்றுக் கொள்வாரா. திருமணத்துக்கு பிறகு நடிப்பது என்பதை அமையும் கணவரை பொருத்தது. உதாரணமாக சூர்யாவை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணத்துக்கு பிறகு மனைவி ஜோதிகாவை நடிக்க அனுமதித்துள்ளாரே" என்று கேட்டுள்ளார்.

    English summary
    Actress Kasthuri Sankar says that Why we accept grandpas as heroes but young girls are rejected after marriage? in her twitter page.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X