கிரண்பேடிக்கு எதிராக அணி திரளும் அதிமுக - கண்டன ஆர்ப்பாட்டம்.... : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் தன்னிச்சையாக செயல்படும் துணைநிலை ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடத்தவுள்ளதாக புதுவை அதிமுக தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக முதல்வர் நாராயணாசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கு அரசு செயல்பாடுகள் பாதிப்படைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Admk announced protest against kiran bedi

மேலும், அண்மையில் புதுச்சேரியில் மூன்று பாஜக எம்.எல்.ஏக்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக நியமனம் செய்தது பெரும் சர்ரச்சையை உருவாக்கியது.

Anbalagan Slammed lieutenant governor Kiran Bedi-Oneindia Tamil

இந்நிலையில் புதுவை அதிமுக நிர்வாகி அன்பழகன், துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்தும், இனிமேலாவது அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தை அதிமுக நடத்துவுள்ளதாகத் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry Admk leader Anbazhagan told that Admk will satge protest against kiran bedi insisting to change her attitude and approach.
Please Wait while comments are loading...