For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிக்னல் விழுந்துருச்சோ.. செம ஜோரா இணைந்து பறக்கும் அதிமுக-பாஜக கொடிகள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கக் கூடும் என கூறப்படும் நிலையில் சென்னையில் இந்த இரு கட்சிகளின் கொடிகளும் ஒன்றாக பறந்துகொண்டிருப்பது, 'சிக்னல் வந்துருச்சு போல... கூட்டணி உறுதியாகிடுச்சோ' என பேசவைத்துள்ளது.

லோக்சபா தேர்தலைப் போல அல்லாமல் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. குறிப்பாக அதிமுக- பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் பாஜக 25 தொகுதிகள் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

ADMK, BJP party flags flying together

அதிமுக- பாஜக கூட்டணி அமையலாம் என்பதால் திமுக அல்லது மக்கள் நலக் கூட்டணி பக்கம் செல்வது என விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை மேம்பாலத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் கட்சி கொடிகள் இரண்டும் இணைந்த படி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கின்றன.

ADMK, BJP party flags flying together

சும்மா இருப்பார்களா நெட்டிசன்ஸ்... அப்படியே படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டனர். இந்த படத்துக்குப் போடப்பட்ட கமெண்டுகளில் ஒன்று

"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே"...

நிஜம்தானே!

English summary
Netizens posted ADMK and BJP party flags are flying together in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X