For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாவே தெய்வம்... மறைந்த ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக நிர்வாகி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் கோயில் கட்டியுள்ளார்

By Karthikeyan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக நிர்வாகி சாமிநாதன் என்பவர் கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் படங்களும் வைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இரண்டடியில் ஜெயலலிதாவின் வெங்கல சிலை வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5 -ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட எம்ஜிஆர் சமாதி நினைவிட வளாகத்தில் ஒருவாரமாக பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADMK cadre is build a temple for Jayalalitha

ஜெயலலிதாவின் மறைவு அதிமுக தொண்டர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே அவர்கள் கருதுகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.சாமிநாதன், 18-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர் மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 லட்சம் செலவில் கோயில் கட்டியுள்ளார்.

English summary
AIADMK functionary is build a temple for Jayalalitha in tanjore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X