பாஜக சொல்வதை அப்படியே மண்டியிட்டு கேட்கிறது அதிமுக அரசு.. கே.ஆர் ராமசாமி சுளீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சொல்வதை அப்படியே மண்டியிட்டு கேட்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது என கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ADMK govt listening what BJP says: Congress MLA KR Ramasami

அப்போது பேசிய காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பாஜக என்ன சொல்கிறதோ அதை மண்டியிட்டு கேட்கும் அரசாக அதிமுக உள்ளது என அவர் குற்றம் சாட்டினார். நீட் தேர்வை அதிமுக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை எனவும் ராமசாமி கேள்வி எழுப்பினார்.

மேலும் சட்டசபையை கூட்டி அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தினார். இதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய எம்எல்ஏ விஜயதாரணி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress MLA KR Ramasami accuses that ADMK govt listening what BJP says. The Tamil Nadu govt should prove the majority he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற