பணத்தையும், பதவி சுகத்தையும் தக்க வைக்க இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளோம். இதுதான் ஜெயக்குமார் இன்று மாலை தனது சகாக்கள் சார்பில் வெளியிட்ட அறிவிப்பு. இத்தனை நாட்களாக இந்த குடும்பம் இவர்கள் கண்களை உறுத்தாமல் போனதுதான் பெரிய ஆச்சரியம்.

எல்லாம் சேர்த்த பணத்தையும், அனுபவித்து வரும் பதவி சுகத்தையும், மிச்சமிருக்கும் பதவிக் காலத்தை விட்டுத் தர மனம் இல்லாததுமே இந்த முடிவுக்கு காரணமே தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை எல்கேஜி குழந்தை கூட சொல்லி விடும்.

இவ்வளவு நாட்களாக சசிகலா, தினகரனுடன் இருந்து வந்த இவர்கள், கூவத்தூர் முகாமில் கொட்டமடித்து ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கிய இவர்கள் திடீரென அந்தக் குடும்பம் என்று பேச ஆரம்பித்திருப்பது மக்களிடையே கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

மறைமுக மிரட்டல்கள்

மறைமுக மிரட்டல்கள்

அதிமுக அம்மா குரூப் திடீரென தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் முடிவுக்கு வந்ததற்கு பல காரணங்களைக் கூற முடியும். அவர்கள் மீது பாய்ந்து வந்த வருமான வரி ரெயட்டுகள், தொடர்ந்து பாயத் தொடங்கிய வழக்குகள் ஒரு முக்கியக் காரணம். இவை மறைமுகமாக விடுக்கப்பட்ட மிரட்டல்கள் ஆகும்.

தினகரனை தூக்காவிட்டால்

தினகரனை தூக்காவிட்டால்

தினகரனை கட்சியை விட்டு விரட்ட வேண்டும். சசிகலா ஒதுக்கப்பட வேண்டும். இவை நடந்தால் மட்டுமே நீங்கள் தப்ப முடியும். இல்லாவிட்டால் மொத்தமாக நாஸ்தி ஆவீர்கள் என்பதுதான் இவர்களுக்கு விடுக்கப்பட்டு வந்த மறைமுக மிரட்டல். இதுதான் இவர்களை இந்த முடிவுக்கு உந்தித் தள்ள முக்கியக் காரணம்.

இழக்க விருப்பமில்லை

இழக்க விருப்பமில்லை

சிலரை தாங்கிப் பிடிப்பதற்காக தங்களது நல வாழ்வையும், இத்தனை காலம் சேர்த்து வைத்த சொத்துக்கள், பணம், அனுபவித்து வரும் பதவி சுகம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்க இவர்கள் தயாராக இல்லை. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு நினைத்ததெல்லாம் கிடைக்கும் சூழலில் அதைப் பறி கொடுக்கவும் இவர்கள் தயாராக இல்லை.

இதுதான் இவர்கள்!

இதுதான் இவர்கள்!

தங்களுக்கு சாதகமானது நடக்கும் வரை அவர்களை தாங்கிப் பிடிப்பது, ஜால்ரா அடிப்பது, காக்கா பிடிப்பது என்பதுதான் அதிமுகவினரின் அடிப்படை குணம். அதைத்தான் ஜெயலலிதாவிடமும் செய்தனர், சசிகலாவிடமும் செய்தனர், கடைசியாக தினகரனிடமும் செய்தனர். இதோ இப்போது ஓ.பி.எஸ்ஸிடம் செய்யப் போகிறார்கள். இதுதான் அதிமுக!

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எடுத்த முடிவு முற்றிலும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. அதேபோலத்தான் தற்போதும் தங்களது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த முடிவை இவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஜெ. மரணத்தை விசாரிப்பார்களா

ஜெ. மரணத்தை விசாரிப்பார்களா

இத்தனை பேரும் இவர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். நிச்சயம் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை இப்போதே கூறி விடலாம். அப்படி நடந்தால் மட்டுமே இவர்கள் தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துள்ளதாக நம்ப முடியும்.

பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK Amma party has sacked Dinakaran family from the party and they have taken this decision to save them from the centre's ire.
Please Wait while comments are loading...