For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்யத் தடை இல்லை - வழக்கறிஞர் துரைசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    மெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு!- வீடியோ

    சென்னை: அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கறிஞர் துரைசாமி கூறியுள்ளார்.

    ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் சமாதி அமைக்கப்பட்டது சட்டவிரோதமான செயல். எனவே சமாதியை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்டோர் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

    Advocate Duraisamy ready to withdraw his case

    இந்த வழக்குகளை காரணம் காட்டித்தான் தற்போது கருணாநிதிக்கு இடம் தர தமிழக அரசு மறுத்துள்ளது. இதனால் திமுகவினர் கொதிப்படைந்துள்ளனர். மெரீனாவில் நினைவிடம் அல்லது சமாதி அமைக்க உயர்நீதிமன்றம் தடை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சி தருவதாக சட்ட நிபுணர்களும் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் துரைசாமி சன் செய்திக்கு அளித்த பேட்டியில், நான் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயலலிதா சமாதியை எதிர்த்துதான். அது கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம், அண்ணா நினைவிடமானது, கூவம் நதிக்கரையில்தான் அமைந்துள்ளது. அது கடற்கரை ஒழுங்குமுறை விதிக்கு உட்படாது. எனவே அங்கு கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை, சட்டப் பிரச்சினையும் இல்லை.

    ஜெயலலிதா சமாதிதான் சட்டத்திற்கு புறம்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி உடல் அடக்கத்திற்காக எனது வழக்கை வாபஸ் பெறவும் கூட நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் துரைசாமி.

    English summary
    Advocate Duraisamy has said that he is ready to withdraw his case in the HC to pave the way for the smooth burial of Karunanidhi in Marina beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X