For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

13 முறை தமிழகம் வந்த ராஜீவ் மறைந்த பின் 30 வருடம் பின் தங்கிப் போன இந்தியா- சித்தன்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க 13 முறை தமிழகத்திற்கு வந்தார் ராஜீவ் காந்தி. அவர் மறைந்த பின்னர் 30 வருடம் பின் தங்கிப் போய் விட்டது நமது நாடு என்று பேசியுள்ளார் முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன்.

திண்டுக்கல்லில் நடந்த ராஜீவ் காந்தி, மூப்பனார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சித்தன் பேசுகையில், கட்சித் தாவல் தடைச்சட்டம், தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் நாட்டில் அறிமுகப்படுத்தியவர் ராஜீவ் காந்திதான்.

rajiv

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 13 முறை ராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வந்தார். ஆனால் ராஜீவ் காந்தியின் மறைவால், இந்தியாவின் வளர்ச்சி 30 ஆண்டுகள் பின் தங்கிவிட்டது.

மோடியின் அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் அரசு செய்யாத எந்த திட்டத்தை, அவர்கள் செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்கலாம் என்றார் சித்தன்.

English summary
Former Congress MP NSV Siddhan has said that, after late Rajiv Gandhi's demise India is lagging behind 30 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X